Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. நாளை முதல் மீண்டும்…. அதிகாரிகளின் தகவல்….!!

நாளை முதல் வழிபாட்டுத் தலங்கள் திறப்பதற்கு அரசு அனுமதி கொடுத்ததால் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் அனைத்து வழிபாட்டு தலங்களும் அடைக்கப்பட்டு பக்தர் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். ஆனால் தற்போது கொரோனா’படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து வழிபாட்டு தலங்களும் நாளை (திங்கட்கிழமை) முதல் விதிமுறைகளை பின்பற்றி திறப்பதற்கு அனுமதிக்கப்படும் என்றும் திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு விழா நடத்த அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களையும் ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியை தீவிரமாக செய்து வருகின்றனர்.

அதன்படி சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலின் சுவர்கள், கல் மண்டபங்கள், உள்பிரகாரம், வெளிப்பிரகாரம் போன்றவை தண்ணீர் அடித்து சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணிகள் இன்றுடன் நிறைவு பெற்று நாளை (திங்கட்கிழமை) அதிகாலை முதல் மாவட்டத்தில் உள்ள 1,221 கோவில்களிலும் நடைபெறும் பூஜைகள் மற்றும் அபிஷேகங்களுக்கு பக்தர்கள் அரசின்  வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளிவாசல்கள், மசூதிகள் போன்றவற்றிலும் திருப்பலி மற்றும் ஆராதனைகள் தொழுகைகளில் பக்தர்கள் அனுமதிக்க இருக்கின்றனர். இதற்கு ஏற்றவாறு ஆலயங்கள் மற்றும் மசூதிகள், பள்ளிவாசல்கள் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பணி தொடங்கியிருக்கின்றது.

Categories

Tech |