உடல் நிலை சரியில்லாததால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அத்திமரப்பட்டி பகுதியில் கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு சோலையம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணேசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை. இதனால் கணேசன் மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கணேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய சோலையம்மாள் தனது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று கணேசனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு கணேசனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று கணேசனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.