Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நீ ரொம்ப குண்டா இருக்க” புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பகுதியில் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்த ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரமேஷ் தனது தாய்மாமா மகளான சரண்யா என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் ரமேஷ் தனது மனைவியிடம் நீ குண்டாக இருக்கிறாய் என்றும், உன்னை எனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறியதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபமடைந்த ரமேஷ் உன்னுடன் வாழ்வதற்கு பதிலாக நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன் பிறகு ரமேஷ் தனது மோட்டார் சைக்கிளில் இருந்து ஒரு பாட்டில் பெட்ரோலை பிடித்து அதனை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |