Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இதுக்கா இப்படி செய்யனும்… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

தொழிலாளியை கல்லைத் தூக்கிப் போட்டு கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தஞ்சை நகர பகுதியில் கூலித் தொழிலாளியான அருமைக்கொடி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் புதுக்குளம் பகுதியில் அருமைக்கொடியின் தலையின் மீது  யாரோ கல்லை தூக்கிப் போட்டு கொன்றுள்ளனர் என அவ்வழியில் சென்ற சிலர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அருமைக்கொடியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அருமைக்கொடி தனது நண்பர்களுடன் மது குடித்துக் கொண்டிருக்கும் போது தகராறு ஏற்பட்டதால் அவரை, அவரின் நண்பர்களே கொலை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் அருமைக்கொடியின் நண்பர்களான அதே பகுதியில் வசிக்கும் செல்வராஜ் மற்றும் தாவீது ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் தாவீது மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரும் உறவினர்கள் என்றும் அவர்கள் இருவரும் அருமைக்கொடியுடன் இணைந்து வேலைக்குச் செல்வது வழக்கம் என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில் அருமைக்கொடி, தாவீது மற்றும் செல்வராஜ் ஆகியோர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற போது அவர், 2 பேரையும் அழைத்து மதுவும் கூடவே ஆட்டுக் குடல் கறியும் வாங்கித் தருகிறேன் என்று கூறி தாவீது மற்றும் செல்வராஜ் அழைத்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து அருமைக் கொடி, தாவீது மற்றும் செல்வராஜ் ஆகியோர் இணைந்து மது குடித்துக் கொண்டிருக்கும் போது எங்கே ஆட்டுக் குடல் கறி என்று 2பேரும் கேட்டுள்ளனர். அதற்கு அருமைக்கொடி நான் வாங்கித் தர மாட்டேன் என்று கூறி தகாத வார்த்தையில் திட்டியதோடு கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த தாவீது மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரும் இணைந்து அருமைக்கொடிய தாக்கி கீழே தள்ளி விட்டு அங்கிருந்த கல்லை எடுத்து அவரின் தலையின் மீது போட்டு கொலை செய்துள்ளனர் என்று காவல்துறையினர் நடத்திய விசாரணையில்  தெரியவந்துள்ளது.  இதனையடுத்து காவல்துறையினர் தொழிலாளியை கல்லால் அடித்து  கொலை செய்த குற்றத்திற்காக தாவீது மற்றும் செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |