Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உன் நல்லதுக்கு தானே சொன்னோம்… சிறுமி எடுத்த விபரீத முடிவு… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பெற்றோர் கண்டித்ததால் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பிரியதர்ஷினி என்ற சிறுமி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த மாணவி ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்தாமல் செல்போனில் அடிக்கடி கேம் விளையாடியுள்ளார். இதனால்  பிரியதர்ஷினியை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த சிறுமி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

அதன்பின் மயங்கிய நிலையில் கிடந்த பிரியதர்ஷினியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பிரியதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |