Categories
மாநில செய்திகள்

மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் …. முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது.

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை நிறுத்த வேண்டும். அணை கட்டுவதற்கு எந்தவித ஆரம்பக்கட்டப் பணிகளும் செய்ய ஆணையம் அனுமதிக்கக் கூடாது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இக்கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிப்பதைத் தவிர்க்க வேண்டும் என அந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதி உள்ளார். அதில், மேகதாது அணை  திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை தமிழக அரசு தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேகதாது அணை திட்டத்தால்  தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே நல்லுறவு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். மேகதாது திட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்ற கருத்தை ஏற்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |