தடையை மீறி மதுபாட்டில்களை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள சங்குபட்டி பகுதியில் மதுபாட்டில்கள் கடத்தி செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல் துறையினர் அப்பகுதியில் வாகனத் தணிக்கை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவ்வழியாக வேகமாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அப்போது அதில் 26 மதுபாட்டில்கள் இருப்பதை கண்டுபிடித்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஹரி விக்னேஷ் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் ஹரி விக்னேஷ் கடத்திச்சென்ற 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தடையை மீறி மது பாட்டில்கள் கடத்திய குற்றத்திற்காக ஹரி விக்னேசை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.