தற்போது நிதி நெருக்கடி காரணமாக பல வங்கிகளும் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் யூனியன் வங்கியுடன் ஆந்திர மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகள் இணைக்கப்பட்டன. இருப்பினும் இந்த வங்கி வாடிக்கையாளர்கள், வங்கி கணக்கு எண் மாற்றப்படாமல் இருந்தது.மேலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட பழைய காசோலைகளை மாற்றி புதிய காசோலைகளை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இந்த வங்கி காசோலைகள் ஜூன் மாதத்துக்குப் பிறகு செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த இரண்டு வங்கி வாடிக்கையாளர்கள் பழைய காசோலைகளையும், IFSC குறியீடுகளையும் செப்டம்பர்-30 வரை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் புதிய வங்கியின் IFSC குறியீடு மற்றும் காசோலைகளை பெற்றுக்கொள்ளுமாறு யூனியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.