Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சாலையோரம் படுத்து கிடந்தவர் …. உடல் நசுங்கி உயிரிழப்பு …. போலீசார் வலைவீச்சு ….!!!

மதுபோதையில்  சாலையோரம் படுத்து கிடந்தவர் மீது கார் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார் .

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே சீனிவாசன் நகர் பகுதியில் டாஸ்மார்க் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்போது டாஸ்மாக் கடைக்கு வந்த ஒருவர் மது அருந்திவிட்டு குடிபோதையில் சாலையோரம் படுத்து கிடந்தார். இந்நிலையில் அந்த வழியே சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் விபத்தில் இறந்தவர் பூந்தமல்லியை அடுத்துள்ள படூர் பகுதியை சேர்ந்த ரகுபதி என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அங்கிருந்த  சிசிடிவி கேமராவில்  பதிவான காட்சியை வைத்து அவர் மீது மோதிய கார் டிரைவரை  போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |