Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம்-வேன் மோதல்.. கோர விபத்தில் பறிபோன உயிர்.. சேலத்தில் பரபரப்பு…!!

இருசக்கர வாகனம் மீது வேன்மோதிய விபத்தில் இஞ்சினியர்  மாணவர் பலியான சம்பவம்  மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி பகுதியில் அன்பு ராஜன் என்பவர் வசித்துவருகிறார்.   இவருக்கு வெற்றிராஜன் என்ற மகன் இருந்துள்ளார். இறுதியாண்டு பொறியியல் மாணவரான வெற்றிராஜன் இணையவழிக் கல்வி பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வெற்றிராஜன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது செட்டியேரி பகுதியில் வேகமாக வந்த மினி வேனானது இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட வெற்றிராஜன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். இது குறித்து தகவல அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து  காவல் துறையினர் மினிவேன் டிரைவர் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |