நடிகை சதா சந்திரமுகி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை நழுவவிட்டதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சதா. இவர் இந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் இதன் பின் சதாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. தற்போது இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த சதா ரஜினியின் சந்திரமுகி பட வாய்ப்பை நழுவவிட்டது குறித்து தெரிவித்துள்ளார். அதில், இரண்டு முறை தனக்கு சந்திரமுகி படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தது என்றும் சில சூழல்கள் காரணமாக அந்த படத்தில் தன்னால் நடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சந்திரமுகி படத்தில் மாளவிகா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சதாவை அழைத்ததாக கூறப்படுகிறது.