Categories
தேசிய செய்திகள்

நீங்க இந்த App யூஸ் பண்றீங்களா…? – கேஷ்பேக் சலுகை அறிவிப்பு…!!

இந்தியாவில் தற்போது டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகமாக மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அதுவும் இந்த கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக ஷாப்பிங் செய்வது, பணம் அனுப்புவது போன்றவற்றை மக்கள் செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் இந்த ஆப்களில் கேஷ்பேக் போன்ற சலுகைகள் வழங்கப்படுவதால் மக்களிடையே ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. இதனால் கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற ஆப்கள் தங்களுடைய தொழிலில் அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது.

இந்நிலையில் பேடிஎம் தற்போது அட்டகாசமான சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அந்த வகையில் டிஜிட்டல் இந்தியா தொடங்கி ஆறு ஆண்டுகள் நிறைவு பெறுவதை கொண்டாடும் வகையில் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் ரூபாய் 50 கோடி மதிப்பிலான கேஷ்பேக் சலுகையை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 200 மாவட்டங்களில் அறிமுகப்படுத்த இருக்கும் இந்தத் திட்டம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சிறப்பு கவனத்துடன் அமல்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |