மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமரின் உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது .
மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின் கடந்த சில தினங்களுக்கு முன் வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . ஆனால் பிரதமர் முஹைதீன் யாசின் உடல்நிலை குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகாத நிலையில் நேற்று பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ‘பிரதமர் முஹைதீன் யாசின் உடல்நிலை நன்றாக உள்ளது என்றும் சிகிச்சை பெற்றவுடன் விரைவில் அவர் வீடு திரும்புவார்.
மேலும் பிரதமருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு மீண்டும் புற்றுநோய் இருப்பதற்கான பாதிப்பு ஏதும் இல்லை ‘என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரதமருக்கு கணைய புற்றுநோய் இருப்பது தெரியவந்தது . இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த ஜூன் மாதம் புற்றுநோய் பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்ததாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.