நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் நாட்டில் அனைத்து வகையான பருப்புகளை இருப்பு வைப்பதற்கான உச்ச அளவுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. பருப்பு விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பதுக்கலை தடுக்க வும் அக்டோபர் மாதம் வரை பாசிப்பருப்பு தவிர மற்ற அனைத்து வகை பருப்புகளையும் இருப்பு வைக்க தடை விதித்துள்ளது. மொத்த விற்பனையாளர்கள் 200 டன், சில்லரை வியாபாரிகள் ஐந்து டன்னுக்கு மேல் இருப்பு வைக்க கூடாது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.