அமெரிக்காவில் புயல் பாதிப்பு காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் எல்சா புயல் நெருங்கி வருவதால் அந்நாட்டுப் கவர்னர் Ron DeSantis அவசரநிலைப் பிரகடனப்படுத்தி உள்ளார். இந்த எச்சா புயல் கரையைக் கடக்கும் போது கடும் மழை மற்றும் புயல் பாதிப்பு ஏற்படும் என்பதால் புளோரிடாவில் உள்ள 15 மாவட்டங்களுக்கு அவசரநிலையை அறிவித்துள்ளார்.
அத்துடன் மாகாணத்தின் தெற்குப் பகுதிகளில் இன்று முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் அப்பகுதி மக்கள் பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராக இருக்கும் மாறும் கவர்னர் வலியுறுத்தி உள்ளார். மேலும் எல்சா புயல் வரும் சனிக்கிழமை ஜமைக்கா மற்றும் கிழக்கு கியூபாவின் பகுதிகளில் மெதுவாக கரையைக் கடக்கும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.