Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்! இன்று முதல் தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும்…. இதெல்லாம் கட்டாயம்…!!!

தமிழகம் முழுவதும் இன்று முதல் புதிய தளர்வுகள் அரசு அறிவித்துள்ள நிலையில், தளர்வுகள் அனைத்தும் நடைமுறைக்கு வர உள்ளன . இந்நிலையில் சென்னை காவல் துறை சார்பில் புதிய நடைமுறைகள் இன்று நடைமுறைப்படுத்த உள்ளது. இதனால் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியாளர் விஜயராணி ஆகியோர் தலைமையில் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர், இன்று முதல் கூடுதல் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற சென்னை  உத்தரவிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் வணிக வளாகங்களில் நுழைவுவாயிலில் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்படும். கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யவும், முகக்கவசம் கட்டாயம் அனைவரும் அணியவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இருந்து இரும்பு வேலி தடுப்பு அமைத்து, வட்டங்கள் வரையப்பட்டு சமூக இடைவெளியை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஜவுளி, நகை கடை ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும். கடற்கரையில் தடுப்புகள் அமைத்து தொடர்ந்து கண்காணிக்கப்படும். மக்கள் கூட்டமாக வருவதை தவிர்க்க கண்காணிப்பு தீவிரபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |