ஒளிப்பதிவு திருத்த சட்டத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன்படி சீமான் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். திரைக்கலையின் குரல்வளையை நெரித்து, கருத்துரிமையை குழிதோண்டிப் புதைக்கும் ஒரு முயற்சி என்று குறிப்பிட்ட அவர், ஒன்றிய அரசு மாநில உரிமைகளை பறிப்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது என்றும் உடனடியாக இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார். திரைத் துறையினருக்கு தனது முழு ஆதரவைத் தருவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
Categories