தேவையின்றி இங்கிலாந்து போர் கப்பல் போல் தங்களுடைய கடல் எல்லைக்குள் நுழைந்தால் தகுந்த பதிலடி கொடுப்போம் என்று ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யா கடந்த 2014இல் கிரிமியாவை உக்ரேனிய நாட்டிலிருந்து பிரித்து தன்னுடன் இணைத்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டினுடைய HMS defender என்னும் போர்க்கப்பல் கடந்த மாதம் கிரிமியாவிற்கு அருகிலுள்ள கருங்கடலில் அத்துமீறி நுழைந்துள்ளது.
இதனால் ரஷ்யா தங்களுடைய நாட்டின் போர்க்கப்பல் மற்றும் போர் விமானத்தின் மூலம் இங்கிலாந்தின் HMS Defender டரை எச்சரிக்கும் விதமாக அந்த கப்பல் செல்லும் பாதையில் குண்டுகளைப் போட்டு அதனை விரட்டியடித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய ஜனாதிபதியின் பத்திரிக்கை செயலாளர் கூறியதாவது, தங்கள் நாட்டை தேவையின்றி சீண்டினால் அதற்கான தகுந்த பதிலடியை கொடுப்போம் என்று ரஷ்ய ஜனாதிபதியினுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.