Categories
உலக செய்திகள்

இதுக்கு காரணமே இவங்க தான்..! இளவரசருக்கு எதிரான சதி… வெளியான பகீர் தகவல்..!!

வில்லியம் ஆதரவு அரண்மனை ஊழியர்கள் செய்த சதியால் தான் பிரித்தானிய இளவரசர்கள் வில்லியம்-ஹரி இடையே பிரிவு ஏற்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

வில்லியம் ஆதரவு ஊழியர்கள் இளவரசர் ஹரி உளவியல் பாதிப்புக்குள்ளானதால் தான் அரண்மனைக்கு எதிராக பேசுகிறார் என்று அனைவரையும் நம்ப வைத்துள்ளனர். இதற்கிடையே அரண்மனை ஊழியர்களில் ஒருவர் இளவரசர் ஹரி கடந்த 2019-ஆம் ஆண்டு எங்கள் இருவரின் பாதையும் இனி வேறுவேறாக அமைய வாய்ப்புள்ளதாக ஒரு போட்டியில் குறிப்பிட்டிருந்த பிறகே அவருக்கு எதிராக சதி வலைகள் பின்னப்பட்டதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் கென்சிங்டன் அரண்மனை ஊழியர்கள் இளவரசர் ஹரிக்கு எதிரான கருத்துக்களை உருவாக்கி அதனை ஊடகங்களுக்கு தெரிவிக்கின்றன என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

மேகன் மெர்க்கல் தென்ஆப்பிரிக்காவில் அளித்த பேட்டி ஒன்றில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் அதில் அவர் தான் அரச குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை என்பதால் தனக்கு ஆதரவு பெரிதளவில் கிடைக்கவில்லை என்றும் உதவுவதற்கு யாரும் முன் வரவில்லை எனவும் கூறியிருந்தார். இளவரசர் வில்லியம் ஆதரவு ஊழியர்கள் உலக அளவில் கவனிக்கப்பட்ட நேர்காணலுக்கு பிறகு இளவரசர் ஹரிக்கு எதிரான பரப்புரையை மேற்கொண்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே இளவரசர் வில்லியம் முதன் முறையாக ஹரியின் உளவியல் ஆரோக்கியம் குறித்து கவலைப்படுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் இளவரசர் வில்லியம் ஹரிக்கு எதிராக அரண்மனை ஊழியர்களால் பரப்பப்படும் இழிவான பரப்புரைக்கு துணை போகிறாரா அல்லது அவருக்கு தெரியாமல் இவை அனைத்தும் நடைபெறுகிறதா என்பது குறித்த தகவல் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. மேலும் அந்த அரண்மனை ஊழியர் கென்சிங்டன் அரண்மனையில் இருந்தே ஹரிக்கு எதிரான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகிறது என்று உறுதியாக கூறியுள்ளார்.

Categories

Tech |