Categories
உலக செய்திகள்

நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் லண்டன்…. ஒன்றாக கூடிய ரசிகர்கள்…. படுகாயமடைந்த காவல்துறை அதிகாரிகள்….!!

இங்கிலாந்து அணி யூரோ கால்பந்து போட்டியின் காலிறுதியில் வெற்றி பெற்றதை கொண்டாடிய ரசிகர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதலில் இரண்டு அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தரப்பு தெரிவித்துள்ளார்கள்.

இங்கிலாந்து அணி 2020 க்கான யூரோ கால்பந்து காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இதனை கொண்டாடுவதற்காக இங்கிலாந்து தலைநகரான லண்டனில் கால்பந்து ரசிகர்கள் கூடியுள்ளார்கள். இதற்கிடையே லண்டனில் கொரோனா தொற்று காரணமாக சுகாதார நெருக்கடி இருந்து வருகிறது.

இதனால் காவல்துறை அதிகாரிகள் லண்டனில் கூடிய கால்பந்து ரசிகர்களை கலைப்பதற்கு முயன்றுள்ளார்கள். இதனையடுத்து கால்பந்து ரசிகர்களுக்கும் காவல்துறையினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில் 2 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக காவல்துறை துணை உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |