வேலூரில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கூடுதலாக 25 பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று போக்குவரத்து துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருச்சி போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் 202 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இதேபோன்று 3 மாவட்டங்களில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு 227 டவுன் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனையடுத்து கடந்த 1-ஆம் தேதி முதல் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இன்று (திங்கட்கிழமை) முதல் கோவை, திருப்பூர், சேலம் போன்ற 11 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்பின் வேலூர் போக்குவரத்து மண்டலத்திலிருந்து அந்த மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 25 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரி கூறும்போது, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வேலூரில் இருந்து சேலம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களுக்கு கூடுதலாக 25 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகளின் வருகையை பொறுத்து அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஆகவே பேருந்துகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றும்படி அனைத்து கண்டக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று போக்குவரத்துத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.