சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்த நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள அரூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாப்பிரெட்டிப்பட்டியில் வசிக்கும் சொக்கலிங்கம், மகேந்திரன், வஜ்ஜிரம், கேசவன், மகேஷ்குமார், ஏழுமலை, தயாநிதி, அண்ணாதுரை, சொக்கன் ஆகியோர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. எனவே காவல்துறையினர் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைப்போலவே ஏரியூர் பகுதியில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் அப்பகுதியை சேர்ந்த பழனிசாமி, செல்வகுமார், அஞ்சலி, பழனி, துர்கா, மகேஸ்வரி ஆகியோர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததால்
காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.