Categories
உலக செய்திகள்

இது ரொம்ப கஷ்டமா இருக்கு…. ஹீல்ஸ் காலணியால் வந்த விளைவு…. விமர்சனங்களுக்கு ஆளான பாதுகாப்பு அமைச்சகம்….!!

இராணுவ வீராங்கனைகள் ஹீல்ஸ் காலணிகளுடன் மேற்கொண்ட ஒத்திகை அணிவகுப்பு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

உக்ரைன் நாடு விடுதலை அடைந்து 30 ஆண்டுகள் ஆகின்றது. இதனை கொண்டாடும் வகையில் ராணுவ அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் ராணுவ வீராங்கனைகள் ஹீல்ஸ் காலணியுடன் அணிவகுப்பை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதனை அடுத்து இராணுவ வீராங்கனைகள் ஹீல்ஸ் காலணியுடன் மேற்கொண்ட அணிவகுப்பின் புகைப்படங்கள் தற்போது வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் உக்ரைன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் மீது இந்த ஒத்திகை அணிவகுப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். அதாவது ராணுவ வீராங்கனைகள் வழக்கமாக பயன்படுத்தும் காலணிகளை விட இந்த ஹீல்ஸ் காலணிகள் சற்று கடினமாக இருந்ததாக கருத்து வெளியாகியுள்ளது.

Categories

Tech |