தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதுமட்டுமல்லாமல்கொரோனா பேரிடரை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி தமிழகத்திலேயே தடுப்புசி உற்பத்திக்கு மாத்தி கொடுக்க மத்திய அரசை வலியுறுத்தினார். பாதிப்பு அதிகமுள்ள இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தது மட்டுமல்லாமல் கொரோனா வார்டுக்கு கவச உடை அணிந்து நோயாளிகளை சந்தித்தார். இவ்வாறு திமுக அரசின் ஆட்சி எதிர்க்கட்சிகள் கூட பாராட்டும் வகையில் சிறப்பாக பணியாற்றி வருகிறது.
ஆனால் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் தற்போதைய அரசை குறைகூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனவை முதல்வர் ஸ்டாலின் கட்டுப்படுத்தவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்பியது திமுக தான். திமுக அரசால் கொரோனாவை தடை செய்ய முடியவில்லை. அதுவாகவே ஓய்ந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.