அனுமதி இல்லாமல் வெடி வைத்திருந்த 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பகுதியில் சசிக்குமார் தலைமையிலான காவல்துறையினர் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முத்தால் நாயக்கன் பட்டி பகுதியில் உரிய அனுமதி பெறாமல் முத்து வசந்த், முனியசாமி, மாரியப்பன் ஆகியோர் சோல்சா வெடியை வைத்துக் கொண்டு நின்றிருந்தனர்.
இதனையறிந்த காவல்துறையினர் அந்த வாலிபர்களை கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த பட்டாசை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.