கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பிள்ளையார் கோவில் பகுதியில் சுமைதூக்கும் தொழிலாளியான சின்னத்துரை குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் சின்னத்துரை குமார் சிதம்பரம் பகுதியிலுள்ள பேருந்து நிறுத்ததில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றபோது அங்கு சின்னத்துரை குமார் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்து அவரை பிடித்து விட்டனர்.
இதனையடுத்து காவல்துறையினர் சின்னதுரை குமார் விற்பனைக்காக வைத்திருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக சின்னத்துரை குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.