20 லட்சம் பேரில் ஒருவரை மட்டுமே தாக்கக்கூடிய அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த 5 மாத பெண் குழந்தை 40 ஆண்டு காலம் மட்டுமே வாழ முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இங்கிலாந்து நாட்டில் அலெக்ஸ் மற்றும் டேவ் என்ற தம்பதியர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு லெக்ஸி ராபின்ஸ் என்னும் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து இந்த குழந்தையினுடைய கைவிரல்கள் அசையாமல் இருந்திருக்கிறது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இது குறித்து மருத்துவரிடம் கூறியுள்ளார்கள். இதனை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஃபைப்ரோடிஸ்பிளாசியா ஆசிஃபிகான்ஸ் புரோகிரிசிவா (FOP) என்னும் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளார். இந்த அரிய வகை மரபணு நோய் 20 லட்சம் பேரில் ஒருவரை மட்டுமே தாக்கும் என்று மருத்துவர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இந்த அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டவர்களினுடைய தோல் கொஞ்சம் கொஞ்சமாக கல்லாக மாறி விடும் என்றும், இவர்களுடைய ஆயுட்காலம் 40 ஆண்டுகள் வரை மட்டுமே இருக்கும் என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு எந்தவித தடுப்பூசியும் செலுத்த முடியாது என்றும் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.