Categories
உலக செய்திகள்

சட்டவிரோதமாக நுழைபவர்களுக்கு கடும் தண்டனை.. பிரிட்டன் எச்சரிக்கை..!!

பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக புகுந்த புலம்பெயர்ந்தவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் உள்ள பல மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் புகுவதற்கு தான் முயன்று வருகிறார்கள். இதனால் சட்டவிரோதமாக மற்றும் கடத்தல்காரர்களை வைத்து நுழைகிறார்கள். அவ்வாறு செல்ல முயலும் சமயத்தில் சிலர் இறக்கின்றனர். இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையதளங்களில் வெளியாகி வருகிறது.

எனவே இது போன்ற செயல்களை தடுப்பதற்காக சட்டவிரோதமாக நுழைந்து வரும் புலம்பெயர்ந்த  மக்களுக்கு கடுமையாக சிறை தண்டனை விதிக்கப்படும் என்று  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியான அறிவிப்பில், பிரிட்டன் நாட்டிற்கு சிறு படகு வாயிலாக வரும் புலம்பெயர்ந்தோர் கடும் தண்டனைகளை சந்திக்க நேரும் என்று உள்துறை அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

மேலும் இதற்கு முன்பு, சட்டத்தை மீறி நுழைந்தால், 6 மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அது நான்கு வருடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உள்துறை அமைச்சரான பிரதீப் பட்டேல் தெரிவித்துள்ளதாவது, பாதுகாப்பிற்குரிய சட்டவிதிகளை பின்பற்றி வரும் மக்கள் வரவேற்கப்படுகிறார்கள். அதே சமயத்தில், சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கும் நபர்கள் புதிய திட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |