Categories
சினிமா தமிழ் சினிமா

நேரடியாக டிவியில் ரிலீஸாகும் சமுத்திரகனியின் படம்… வெளியான மாஸ் அறிவிப்பு…!!!

சமுத்திரகனி நடிப்பில் உருவாகியுள்ள வெள்ளை யானை திரைப்படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் ரிலீசாக உள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் சமுத்திரகனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வெள்ளை யானை. சுப்ரமணியம் சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் மனம் கொத்தி பறவை பட நடிகை ஆத்மீயா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து நீண்ட நாட்களாக தியேட்டர் ரிலீசுக்காக காத்திருந்தது.

இந்நிலையில் வெள்ளையானை படம் நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸாகிறது. அதன்படி வருகிற ஜூலை 11-ஆம் தேதி மதியம் 3 மணிக்கு இந்த படம் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது . ஏற்கனவே சமுத்திரக்கனியின் ஏலே படமும் நேரடியாக டிவியில் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது .

 

Categories

Tech |