Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இதை நடத்த அனுமதி தாங்க… தெய்வத்தமிழ் பேரவையினர் போராட்டம்… அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

தெய்வத்தமிழ் பேரவையினர் கோவில்களில் நடைபெறும் கருவறை பூஜை தமிழ் வழியில் நடத்த சட்டம் இயற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் பகுதியில் தெய்வத்தமிழ் பேரவையினர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில்  கோவில்களில் நடைபெறும் கருவறை பூஜை தமிழ் வழியில் நடத்த சட்டம் இயற்ற  வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை தெய்வத்தமிழ் பேரவையினர் வலியுறுத்தினர்.

இந்நிலையில் ஆசீவகம் சமய நடுவம் அமைப்பின் நிறுவன தலைவர் சுடரொளி தலைமையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் இந்த போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |