Categories
உலக செய்திகள்

வயதான தம்பதியரின் நீண்ட முத்தம்…. கொரோனா காலத்தை புகைப்படமாக பதிவு செய்த கலைஞர்…. பின்னர் அடித்த ஜாக்பாட்….!!

ஸ்பெயின் நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்த புகைப்படங்களை தொடர்ந்து பதிவு செய்த புகைப்பட கலைஞர் ஒருவருக்கு இந்த ஆண்டுக்கான புலிட்சர் பரிசு கிடைத்துள்ளது.

ஸ்பெயினில் வசித்து வரும் 85 வயதான பாஸ்கல் என்பவருக்கும், 82 வயதான அகஸ்டின் என்பவருக்கும் திருமணம் முடிந்து 60 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இவர்கள் இருவரும் கொரோனா காலகட்டத்தில் சுமார் 100 நாட்கள் பிரிந்து இருந்துள்ளார்கள். இதனையடுத்து 100 நாட்கள் கழிந்த பிறகு ஒன்றாக சேர்ந்த தம்பதியர் இருவரும் நீண்ட முத்தத்தை பகிர்ந்துள்ளார்கள்.

இந்த முத்தக் காட்சியை எமிலியோ என்னும் புகைப்படக் கலைஞர் படம்பிடித்துள்ளார். இதற்கிடையே புகைப்படக் கலைஞரான எமிலியோ ஸ்பெயின் நாட்டில் தொடர்ந்து கொரோனா பாதிப்பை புகைப்படங்களாக எடுத்து அதனை பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இவர் கொரோனா காலத்தையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து புகைப்படத்தை பதிவு செய்ததற்காக இந்த ஆண்டுக்கான புலிட்சர் பரிசு கிடைத்துள்ளது.

Categories

Tech |