கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து செயல்பட்டு வந்த 4 சித்த மருத்துவ மையங்கள் அடைக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக புதுப்பேட்டை, அக்கரகாரம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி, வாணியம்பாடி யுவானி கேர், ஆம்பூர் கன்னிகாபுரத்தில் உள்ள தனியார் பள்ளி என 4 இடத்தில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேர்ந்தவர்களுக்கு கபசுரக் குடிநீர், சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்ட மருந்துகள், சத்தான உணவுகள் கொடுக்கப்பட்டது.
இது கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை சுமார் 2,500 பேர் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். ஆனால் தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தினசரி எண்ணிக்கை 35- க்கு கீழ் குறைந்து வருவதால் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் அடைக்கப்பட்டதாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சுசி கண்ணம்மா தெரிவித்துள்ளார். இவ்வாறு சித்த மருத்துவ சிகிச்சை அளித்த அரசு சித்த மருத்துவர்கள் விக்ரம் குமார், உமேரா போன்றோரை கலெக்டர் அமர் குஷ்வாஹா பாராட்டி பரிசுகொடுத்துள்ளார்.