Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எப்படி சமாளிக்க போறேன்…? டிரைவர் எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

போதிய வருமானம் இல்லாததால் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பகுதியில் மன்சூர் அலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்துள்ளார். இவருக்கு பானு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஏழு வயதில் மகன் இருக்கிறான். இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில் போதிய வருமானம் இல்லாமல் குடும்பத்தை நடத்துவதற்கு சிரமப்பட்ட மன்சூர் அலி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories

Tech |