மோட்டார் சைக்கிளின் சீட்டுக்கு அடியில் பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சரண் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டுக்கு முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளின் சீட்டுக்கு அடியில் பாம்பு பதுங்கி இருந்ததை பார்த்த சரண்குமார் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மோட்டார் சைக்கிளின் சீட்டுக்கு அடியில் பதுங்கி இருந்த பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டனர்.