Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்த வயசுலேயே குழந்தையா…? ரகசியமாக குடும்பம் நடத்திய ரவுடி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

17 வயது சிறுமியுடன் ரகசியமாக குடும்பம் நடத்திய ரவுடியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள காசிமேடு பகுதியில் லோகேஷ் என்ற ரவுடி வசித்து வருகிறார். இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. இந்நிலையில் லோகேஷ் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் இருக்கும் ஒரு கடையில் பொருட்கள் வாங்கும் போது கடை உரிமையாளரின் 17 வயது பேத்தியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனையடுத்து லோகேஷ் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமியை கடத்தி வந்து சென்னையில் வைத்து குடும்பம் நடத்தியுள்ளார்.

இதனால் அந்த சிறுமி தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கின்றார். இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலருக்கு அக்கம் பக்கத்து வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி அதிகாரிகள் காவல் துறையினருடன் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய போது திருமணம் செய்து கொள்ளாமல் லோகேஷ் சிறுமியுடன் குடும்பம் நடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்பின் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லோகேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |