Categories
சினிமா தமிழ் சினிமா

மணிரத்னத்துடன் ஹாட்ரிக் அடித்த தோட்டாதரணி ….!!

நாயகன் , தளபதி படத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மணிரத்னத்துடன் இணைந்து தோட்டாதரணி இணைவது 3_ஆவது முறையாகும்.

மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக செக்க சிவந்த வானம் திரைப்படம் திரைக்கு வந்தது. செக்க-சிவந்த வானம் திரைப்படத்தை எடுத்த மணிரத்னம் தமிழில் புகழ் பெற்ற போது புராணங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுக்கிறார். விக்ரம் , கார்த்தி , ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய் , நயன்தாரா என்று பல நட்சத்திரமும் நடிக்கவுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ராஜாக்கள் காலத்திற்கான படம் என்பதால் இந்த படத்துக்கான  கலை இயக்குனராக தோட்டா தரணியை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது. நாயகன் , தளபதி என்று மணிரத்னத்துடன் இணைந்து பணியாற்றிய தோட்டாதரணி பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மணிரத்தினத்துடன் இணைந்துள்ளார்.இந்த படத்திற்காக  இசை அமைக்கும் பணியில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு  டிசம்பர் மாதம் தொடங்கவுள்ள நிலையில் ஏ ஆர் ரகுமான் இப்போதே படத்தின் பாடல்களுக்கு இசையமைக்க எதுவாக பாடல்களை பதிவு செய்யக்கூடிய பணியில் இறங்கியிருக்கிறார். இந்த படம் நீண்ட நெடிய வரலாற்று தொடர் என்பதால் பொன்னின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் தெரியவந்ததுள்ளது.

Categories

Tech |