Categories
விளையாட்டு

2022 ஐபிஎல் மெகா ஏலம் எப்போது?…. பிசிசிஐ தகவல்….!!!!

இந்த ஆண்டு இறுதியில் ஐபிஎல் மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் 4 வீரர்கள் வரை தக்க வைத்துக்கொள்ளலாம். அதில் 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் அல்லது 2 இந்திய வீரர்கள் மற்றும் 2 வெளிநாட்டு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம். அதேபோல ஒவ்வொரு அணியின் மொத்த வீரர்களின் சம்பளத் தொகை ரூ.90 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்போதைக்கு புதிய அணிகளை வாங்க கொல்கத்தாவைச் சேர்ந்த ஆர்பி சஞ்ஜிவ் கோயங்கா குழுமம், அகமதாபாதை சேர்ந்த அதானி குழுமம், ஹைதராபாதை சேர்ந்த அரபிந்தோ பார்மா குழுமம் மற்றும் குஜராத்தை சேர்ந்த டோரென்ட் குழுமம் ஆகியவை ஆர்வமாக இருக்கின்றன.

Categories

Tech |