நடிகர் மோகன்லால் மீண்டும் ஜீத்து ஜோசப்புடன் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மலையாள திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது . இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதன்பின் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், திரிஷா நடிப்பில் ராம் திரைப்படம் உருவாகி வந்தது. இந்த படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பை வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டிருந்ததனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக வெளிநாடு செல்ல முடியாததால் இந்த படத்தை கிடப்பில் போட்டனர்.
Happy to announce my upcoming movie '12th MAN' with #JeethuJoseph, produced by @antonypbvr under the banner @aashirvadcine. pic.twitter.com/nPdNK7IBlk
— Mohanlal (@Mohanlal) July 5, 2021
இந்நிலையில் நடிகர் மோகன்லால் மீண்டும் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு டுவெல்த் மேன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை ஆண்டனி பெரம்பாவூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.