தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் செய்து வருகிறார். அதிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனைக் கருதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதன்படி நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு குறித்து பாதிப்புகளை அறிய புதிய குழுவொன்றை நியமித்துள்ளார்.
இந்நிலையில் நீட்தேர்வு பாதிப்புகளை ஆராயும் ஏ கே ராஜன் குழுவை எதிர்த்து பாஜகவின் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கில் ஜூலை 8-ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீட்தேர்வு கொண்டுவரப்பட்டதாக கரு. நாகராஜன் தொடர்ந்த வழக்கில் திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடையிட்டு மனு தாக்கல் செய்துள்ளன.