டாஸ்மாக் கடை விற்பனையாளரை அரிவாளால் வெட்டியதோடு 3 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பேரூர் பகுதியில் தர்ம ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கீலமாங்காவனம் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் தர்மராஜ் வேலையை முடித்து விட்டு மாலை 6 மணிக்கு வீடு திரும்பிய போது அவரை 2 மர்ம நபர்கள் பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து அந்த மர்ம நபர்கள் தர்மராஜின் மொபட்டை உதைத்து அவரை கீழே தள்ளி விட்டு தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் தர்மராஜின் கை, கால் போன்ற பகுதிகளில் வெட்டியதோடு, அவரிடமிருந்த 3 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அதன்பின் அருகில் உள்ளவர்கள் படுகாயமடைந்த தர்மராஜை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.