நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 100 ரூபாயை கடந்துள்ளது.
இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை தொடர்ந்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். இதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கண்டிக்கும் வகையில் மிதிவண்டியில் சென்று கலந்து கொண்டார்.