கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கடற்கரையில் 9 வயதுடைய லேப்ரடார் நாயை கட்டி வைத்து, மூன்று சிறுவர்கள் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் அருகில் உள்ள அடிமலத்துரா என்ற கடற்கரையில் 9 வயதுடைய லேப்ரடார் வகை நாயை சிறுவர்கள் சிலர் கட்டி இழுத்து சென்று படகில் தலைகீழாக கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர். அவர்களின் வெரிதனம் அடங்கிய இந்த வீடியோவானது தற்போது இணையதளத்தில் வெளியானது.இதனையடுத்து #JusticeForBruno என்ற ஹேஷ்டேக் மூலம் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல் எழுப்பப்பட்டது.
இதில் சிறுவயதிலேயே எத்தனை கொடூரமான சம்பவங்களை செய்தால் இவர்கள் வளர்ந்தால் சமூகம் என்னவாகும். இவர்களுக்கு பெரிய தண்டனை வழங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த ஹேர்ஸ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது. இந்த நாயின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அருகிலுள்ள காவல் நிலையத்தில் வழக்கு பதிவானது. இந்த சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனம் பலரும் இந்த வீடியோவை பார்த்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த நாயை அடித்துக் கொலை செய்த 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கேரள ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து நாய் நினைவாக புருனோ என்ற மனுவின் பெயரை நீதிபதிகள் இறுதி விசாரணைக்கு எடுத்துள்ளனர். மனிதர்களின் கொடூர செயல்களுக்கு இதுபோன்ற பல உயிரினங்கள் பலியாகி வருகின்றன. எதிர்காலத்தில் இதுபோன்ற கொடூர சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நீதிமன்றத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.