சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பகுதியில் தயாளன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்திரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் இருவரும் சாலையில் நடந்து சென்ற போது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் கணவன் மனைவி இருவரும் நின்று பேசியுள்ளனர். இதனை அடுத்து வேறு கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் சாலையை கடக்க முயன்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சேலம் நோக்கி செல்லும் சென்னையிலிருந்து வந்த காரானது செல்வத்தின் மீது பலமாக மோதியது. மேலும் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காரானது சாலையில் இடப்புறம் பேசிக்கொண்டிருந்த தயாளன், சந்திரா, மணிகண்டன் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் சந்திரா, தயாளன், செல்வம் ஆகியோர் உடல் நசுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். மேலும் உயிருக்கு போராடிய மணிகண்டனை அருகில் இருப்பவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இது குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சந்திரா, தயாளன், செல்வம் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த விக்கிரவாண்டி காவல்துறையினர் அதிஷ்டவசமாக உயிர்தப்பிய கார் ஓட்டுநரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.