Categories
மாநில செய்திகள்

பாம்பன் பாலம் பராமரிப்பு… ரயில் சேவையில் மாற்றம்…!!!

பாம்பன் பாலத்தில் கடந்த ஜூன் 28 ஆம் தேதி ஏற்பட்ட கோளாறின் காரணமாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி காரணமாக ராமேஸ்வரம் சிறப்பு ரயில் உள்ளிட்ட முக்கிய ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 28ஆம் தேதி ஏற்பட்ட சென்சார் கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தற்போது பராமரிப்பு பணி காரணமாக ரயில் நிலையத்தில் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றது. ரயில் சேவையில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவை பின்வருமாறு,

பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மண்டபம் – ராமேஸ்வரம் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

மண்டபம் – ராமேஸ்வரம் இடையே ஜூலை 14ம் தேதி வரை ரயில்கள் இயக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் சிறப்பு ரயில், மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மறுமார்க்கத்தில் ராமேஸ்வரத்துக்கு பதில் மண்டபத்தில் இருந்து ரயில் புறப்பட்டு சென்னை எழும்பூர் செல்லும்.

திருச்சியில் இருந்து செல்லும் சிறப்பு ரயில் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |