போப் பிரான்சிஸ் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போப் ஆண்டவர் பிரான்சிஸிற்கு, பெருங்குடல் சுருக்கம் பாதிப்பு ஏற்பட்டது. எனவே இத்தாலியின் தலைநகரான ரோமில் இருக்கும் கெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடக்கவுள்ளது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டவுடன் அது தொடர்பான தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 3 மணி நேரங்களுக்கு முன்பு வழக்கமாக நடைபெறும் ஞாயிறு வழிபாட்டில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் பங்கேற்ற மக்களுக்கு மகிழ்ச்சியாக ஆசி வழங்கியுள்ளார். அந்த சமயத்தில் அறுவை சிகிச்சை தொடர்பில் அவர் எதுவும் கூறவில்லை. எனினும் கடந்த வாரத்தில் வழிபாட்டில் கலந்து கொண்ட மக்களிடம் எனக்காக சிறப்பு பிரார்த்தனை செய்யுங்கள் என்று அவர் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.