அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் இ பாஸ் இல்லாமல் செல்லலாம் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. பின்னர் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் சில தளர்வுகளை தமிழக அரசு அவ்வப்போது அறிவித்து வந்தது. அதன்படி இன்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதில் இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் இ பாஸ் இல்லாமல் செல்லலாம் என சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா தலங்களில் 50% நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். பயணிகளின் விவரம் பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் கர்நாடகா கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரி வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.