Categories
உலக செய்திகள்

இதுல எல்லா வசதியும் இருக்கு…. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் புதிய மாடல்…. அதிரடியாக களமிறங்கும் ஐபோன்-13…!!

ஆப்பிள் நிறுவனம் இந்தாண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தவுள்ள பல வசதிகளைவுடைய புதிய ஐபோன்-13 னின் விலை 70,000 ரூபாயிலிருந்து தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் இந்தாண்டு செப்டம்பர் மாதம் அறிமுகமபடுத்தவுள்ள ஐபோன்-13 டெக் உலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஐபோன் 13 mini, 13 pro max, 13, 13 pro என்று 4 வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஐபோன்-13 னிலுள்ள கேமராவின் தரம் periscopic lens மற்றும் Ultra Wide Lens சுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக வர உள்ள இந்த ஐபோன்-13 னில் Refresh Rate 120 ஹெட்ஸ் ஆக மாற்றப்படுவதால், அதற்கேற்றவாறு அதிவேகமாக செயல்படும் A15 Bionic chip processor ரும் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து இந்த புதிய ஐபோனில் Finger Print மற்றும் Face id யும் இடம்பெறுகிறது. இதனை தொடர்ந்து lightening cable மற்றும் wireless charger மூலமாகவும் இதனை சார்ஜ் செய்து கொள்ளும் அடிப்படையில் இந்த புதிய ஐபோன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஐபோனினுடைய விலை 70,000 ரூபாயிலிருந்து தொடங்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |