மெக்சிக்கோவில் கடலுக்கடியில் ஏற்பட்ட வெடிப்பால் எரிமலை வெடிப்பை போன்று கடல்நீரில் தீ கொப்பளித்துக்கொண்டிருந்தது.
மெக்சிக்கோ வளைகுடாவில்அமைந்திருக்கும் அந்நாட்டின் நிறுவனமான பெமெக்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் வயலின் அருகே கடலுக்கடியில் திடீரென்று வெடிப்பு ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் தீ கொளுத்துவிட்டு எரிய தொடங்கியது . இந்த விபத்து கடலுக்கடியில் உள்ள பைப் லைனில் ஏற்பட்ட விரிசல் காரணமாக எரிவாயு கசிவு ஏற்பட்டதால் விபத்து நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 3 கப்பல்களைக் கொண்டு எரிந்து கொண்டிருந்த தீயை சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Having to put out a fire in the middle of the Gulf of Mexico feels just too difficult to believe and yet pic.twitter.com/8OFNNiKyrj
— philip lewis (@Phil_Lewis_) July 2, 2021
இந்தத் தீ விபத்து நிகழ்ந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த விபத்தில் ஊழியர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.