குடியாத்தம் அருகில் ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம்- காவனூர் ரயில்வே நிலைய இடையில் தண்டவாளத்தை கடப்பதற்காக 40 வயதுடைய வாலிபர் முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற ஏதோ ஒரு ரயிலில் வாலிபர் அடிபட்டு உடல் துண்டாகி பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி மனோகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர்..? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.