Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மீன்பிடித் திருவிழாவா…? மர்ம நபர்கள் செய்த செயல்.. காவல்துறையினரின் தீவிர விசாரணை..!!

இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்திய மர்ம நபர்களால் அரும்பாவூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் அரும்பாவூரில் இருக்கும்  ஏரியானது கடந்த ஆண்டு பெய்த கனமழையால் நிரம்பிவிட்டது. இந்நிலையில் இந்த ஏரியை குத்தகைக்கு எடுத்த உள்நாட்டு மீனவர்கள் லட்சக்கணக்கான மீன்களை வளர்த்து அதனை அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.

இதனை அடுத்து அரும்பாவூர் ஏரியில் மீன்பிடித் திருவிழா நடைபெறுவதாக பரவிய வதந்தியை நம்பி சுற்றுவட்டார ஊர்களில் வசிக்கும் பொதுமக்கள் ஏரியில் ஒன்று திரண்டனர்.அதன் பிறகு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மீன்பிடித்துக் கொண்டிருந்த பார்த்த மீனவர் சங்கத்தினர் அதிர்ச்சி அடைந்து யாரும் இங்கே மீன்பிடிக்க கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் மர்மநபர்கள் ஏரிக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 பேருக்கு சொந்தமான இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த பொதுமக்களை அங்கிருந்து் கலைந்து போகச் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மீன்பிடி திருவிழா நடைபெறுவதாக கூறி வதந்தி பரப்பியும், இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தும் கலவரத்தை ஏற்படுத்திய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |